Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
புங்குடுதீவு பகுதியில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனொருவர், சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேயிடத்தைச் சேர்ந்த கை.யசிந்தன் (19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைஞன் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று இறந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago