2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

விபத்தில் படுகாயமடைந்த மாணவன் உயிரிழப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த சிறுவன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  திங்கட்கிழமை (08) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்;தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் தரம் 1இல் கல்வி கற்ற கொக்குவிலைச் சேர்ந்த பார்த்தீபன் சுகஸ்திகம் (வயது 06) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 3ஆம் திகதி புன்னாலைக்கட்டுவனிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஆகியன போட்டிபோட்டு ஓடியதில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ், எதிரே வந்த முச்சக்கரவண்டியை மோதியதுடன், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 மோட்;டார் சைக்கிள்கள் மற்றும் ஏ.ரி.எம் இயந்திரம் ஆகியவற்றை சேதப்படுத்தியது.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த சிறுவன் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்படைய பஸ் சாரதியை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X