2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி

Gavitha   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்களே உயிரிழந்தனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மதிலொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X