2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

விமானப்படையினர் பாவம்

Kogilavani   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை இராணுவத்தினரும் கடற்படையினரும் மட்டுமே கையகப்படுத்தி வைத்துள்ளனர். விமானப் படையினர் தங்கள் பாட்டுக்கு இருக்கின்றனர் என வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டதன்  பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே   அவர் இவ்வாறு கூறினார்.

எமது காணிகளை முப்படையினரும் சுவீகரித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. உண்மையில் முப்படையினரும் எமது காணிகளை சுவீகரித்து வைத்திருக்கவில்லை. இராணுவமும் கடற்படையினருமே எமது காணிகளை பிடித்து வைத்துள்ளனர். விமானப்படையினர் தம்பாட்டுக்கு இருக்கின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X