2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

விரிவுரை மண்டபங்களில் தகாத நடவடிக்கை வேண்டாம்

Niroshini   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரை மண்டபங்களில் காதலர்கள் தகாத நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

விரிவுரை மண்டபங்களில் காதலர்கள் தகாத நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அதற்கான அனுமதி இல்லையெனவும் ஒழுங்காக நடந்துகொள்ளுமாறும் அந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,  தகாத நடவடிக்கை தொடர்பான பழக்கவழக்கங்களை நிறுத்துமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களுக்குள் ஒன்றாக அமரும் காதலர்கள் சிலர் அங்கு தமது காதலை வளர்க்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக முறைப்பாடுகள் இருக்கின்றன.

இந்நிலையில் இவ்வாறானதொரு சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X