2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வீரசிங்கத்துக்கு உருவச்சிலை

Gavitha   / 2016 நவம்பர் 02 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

கூட்டுறவுப் பெரியார் வீரசிங்கம் நினைவாக யாழ்ப்பாணத்தில் அவரது முழு உருவச்சிலை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையில் கூட்டுறவுச்சபை அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கும் கூட்டுறவுசார் நிலையில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் தன்னால் இயன்ற வரை உழைத்து மக்களின் மனதில் தனியிடம் பெற்றவர் கூட்டுறவுப் பெரியர் வீரசிங்கம் ஆவார்.

வடபகுதியில் கூட்டுறவு வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பெரும் பணியை நினைவு கூரும் வகையில் இந்த உருவச்சிலை அமைக்கப்படவுள்ளது.

யாழ். கோட்டை மற்றும் முற்றவெளிக்கு எதிர்புறமாக அமைந்துள்ள ஐந்து மாடிக்கட்டடத்தொகுதி வீரசிங்கம் பெயரில் அழைக்கப்படுவதோடு கீழ்த்தளத்தில் அமைந்துள்ள மண்டபத்துக்கு வீரசிங்கம் மண்டபம் என பெயர் சூட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X