2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வெறி கொண்ட விசர் நாய்; 11 பேர் வைத்தியசாலையில்

George   / 2016 ஜனவரி 22 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

சாவகச்சேரி சிவன் கோவில் பிரதேசத்தில் வசித்த 11 பேதை கடித்த விசர் நாய், இன்று வெள்ளிக்கிழமை இறந்துவிட்டது.

இந்த விசர் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 11 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில், நேற்று வியாழக்கிழமை (22) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 பேரையும் கடித்த நாய், இன்று வெள்ளிக்கிழமை (22) காலையில் இறந்துவிட்டதையடுத்து, அங்கு சென்ற தென்மராட்சிப் பிரதேச கால்நடை வைத்தியதிகாரி க.இரகுநாதன், நாயின் தலையை வெட்டி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பியுள்ளார்.

வீடொன்றில் வளர்க்கப்பட்ட இந்த நாய் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேரையே கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X