2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வேலைவாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

Sudharshini   / 2016 பெப்ரவரி 01 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க தற்போதுள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும்  இந்த விடயத்தை மீண்டும் அவர்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் யாழ்.மாவட்ட மேலதிக செயலாளர் பா.செந்தில்நந்தனன் தெரிவித்தார்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை (01) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்ட பின்னர், மேலதிகச் செயலாளரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தனர். மகஜரைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 'நியமனங்கள் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வெற்றிடங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, நியமனங்கள் வழங்கப்படும். பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளோம். அவர்கள் ஊடாகவே நியமனங்கள் வழங்கப்படும். பகுதி பகுதியாக நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மகஜர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும'; என்றார்.

வடமாகாண ஆளுநருக்கான மகஜரைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் கருத்துக்கூறுகையில்,

'வடமாகாண சபையின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்குவது தொடர்பில் வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு அதிகாரமுள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையும் எங்களை பட்டதாரிகள் வந்து சந்திக்கின்றனர். வெற்றிடங்களை நிரப்புவதற்கு கோரி அதன் மூலம் நியமிக்கப்படுவார்கள். முழு பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X