Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
மிருசுவில் பகுதியிலுள்ள களப்பில் இரைதேடி வந்த 10 வெளிநாட்டு கொக்குகளை வேட்டையாடி, அதனை இறைச்சியாக்கி எடுத்துச் சென்ற நபருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (27) தீர்ப்பளித்தார்.
கைப்பற்றப்பட்ட கொக்கு இறைச்சிகளை தீயிட்டு எரிக்குமாறும், பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
களப்புக்கு வரும் வெளிநாட்டு கொக்குகளை செவ்வாய்க்கிழமை (26) பொறி வைத்துப் பிடித்த மேற்படி நபர், அவற்றின் தோல்களை உரித்து இறைச்சியாக்கிக் கொண்டிருப்பதை அவதானித்த ஒருவர், அது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபர் கொக்கு இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் போது கைது செய்தனர்.
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago