2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புச் சொல்வதை ஏற்கமாட்டேன்

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில், வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புச் சொல்வதற்கு அனுமதிக்கமாட்டேன் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாவகச்சேரி அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது.

அமர்வு முடிவடைந்தப் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துக் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச தொழில்நுட்ப உதவிகள் தேவை எனில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், சர்வதேச அவதானிப்பாளர்கள் தேவை எனில் கேட்கலாம். ஆனால், எமது மக்களுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதை ஏற்க முடியாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X