2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வாள் வெட்டை மேற்கொண்டவர் சிறையில்

Niroshini   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

அளவெட்டிப் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய  நபருக்கு 2 வருட கால கடூழிய  சிறைத்தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்கரன்  திங்கட்கிழமை (08) தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு 1 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அளவெட்டியைச் சேர்ந்த எஸ்.தனேஸ்வரன் என்பவருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பண்டத்தரிப்பில் நடைபெற்ற தாச்சி விளையாட்டுப் போட்டியை பார்வையிட்டு வீடு திரும்பியவர் மீது, குறித்த நபர் வாள்வெட்டை மேற்கொண்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை, இது தொடர்பான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று திங்கட்கிழமை வழங்கப்படும் என ஜனவரி 25ஆம் திகதி வழக்குத் தவணையின் போது கூறப்பட்டது.

தீர்ப்பின் போது, இந்த வழக்கை தொடக்கத்திலிருந்து விசாரணை செய்து வந்த முன்னாள் மல்லாகம் மாவட்ட நீதவானும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவானுமான சி.சதீஸ்கரன் மன்றுக்கு வருகை தருவார் எனக்கூறப்பட்டது.

அதற்கிணங்க, மன்றுக்கு வருகை தந்த நீதவான், தீர்ப்பை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X