2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டில் மூவர் காயம்; மோட்டார் சைக்கிள்களும் சேதம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொஷாந்

யாழ்ப்பாணத்தில், இலக்கத் தகடற்ற ஜீப்பில் வந்த குழுவினர் வாள் வெட்டினை மேற்கொண்டதில் மூன்று இளைஞர்கள் காயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

யாழ். ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயிலுக்கு அருகாமையில், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , 

ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயிலுக்கு அருகாமையில் இலக்கத் தகடற்ற ஜீப்பில் வந்தவர்கள், வீதியால் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்களை மறித்து அவர்களை முழந்தாழிட வைத்து, தாக்குதல் நடத்தி உள்ளனர். 

அவ்வேளை, அந்த வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மற்றுமொரு இளைஞரை அவர்கள் மறிக்க முற்பட்டபோது, குறித்த இளைஞர் நிற்காமல் ஓடியதனால் , தாக்குதலாளிகள், அவரைத் துரத்த முற்பட்டுள்ளனர்.

இதன்போது, முழங்காலில் இருந்த மூன்று இளைஞர்களும் மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு விட்டு, தப்பியோடியுள்ளனர். 

தாக்குதலாளிகள் சென்ற பின்னர் தமது மோட்டார் சைக்கிளை இளைஞர்கள் மீட்க சென்ற வேளை அவை நிலத்தில் விழுத்தப்பட்டு , மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கி வாளினால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மோட்டார் சைக்கிள்களின், திறப்புக்களையும் தாக்குதலாளிகள் தம்முடன் எடுத்து சென்றுள்ளனர். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X