Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்;ற வளாகத்தில் இயங்கி வரும் சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில், சமுதாயம் சார் சீர்திருத்;துதல் கட்டளைக்கு உட்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (02) நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமுதாயம் சார் சீர்;திருத்;த திணைக்களத்தின் மாவட்ட அலுகலகத்தினூடாக நூற்றுக்கும் மேற்பட்டோர் சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வில், சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்த இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு, மாவட்ட அலுவலகத்தில் சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர்; கே.எம்.நஜிம் தலைமையில் நடைபெற்றது.
இதில், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தரும் சட்டத்தரணியுமான வி.பிரசாந்;தன் மற்றும் சட்டத்தரணி நாசீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியுள்ளனர்.
சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களம், நீதிமன்றங்களில் இயங்கும் ஒரு பரந்துபட்ட சேவையை வழங்கும் ஒரு திணைக்களம் ஆகும். இதனது செயற்பாடுகளில்; விசேடமாக ஒவ்வொரு குடும்பத்தையும் நாட்டையும் காக்கும் 1999ஆம் ஆண்;டின் 46ஆம் இலக்க சமுதாயம் சார் சீர்திருத்தக் கட்;டளைச்சட்டம் ஆகும்.
நீதிமன்றங்;களினால் சிறு குற்றச்;சாட்;;டுக்களுக்கு தண்டனை பெற்ற ஒருவர், தன்னை விடுவித்துக் கொள்வதற்காக பல்வேறு செயற்றிட்டங்களை சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
30 minute ago
27 Jun 2025