2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விஷ ஊசி விவகாரம்: முன்னாள் போராளிகள் 146 பேருக்கு மருத்துவ பரிசோதனை

Gavitha   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷ ஊசி விவகாரம் தொடர்பிலான மருத்துவ பரிசோதனைக்கு, இதுவரையில் முன்னாள் போராளிகள் 146 பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று, வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 விஷ ஊசி தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில், கடந்த ஐந்து வாரங்களாக, வடமாகாண வைத்தியசாலைகளில், மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதில் யாழ். மாவட்டத்தில் 29 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 24 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 81 பேரும், வவுனியா மாவட்டத்தில் 07 பேரும், மன்னார் மாவட்டத்திலிருந்து 5 பேருமாக, மொத்தமாக 146 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.  

 எதிர்காலத்தில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவ பரிசோதனைகளை நடத்தவுள்ளதாக, வடமாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X