2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வட மாகாண சபை உளவியல் சேவை ஆற்ற வேண்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வட மாகாண சபை தங்களுக்கு உளவியல் சேவைகளை ஆற்ற வேண்டும் என காணாமற்போனோரின் உறவினர்கள் வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர்.

யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (07) விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் ஹுசைன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்தபோது, ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, காணாமற்போனோரின் உறவினர்கள், முதலமைச்சர் அலுவலகம் முன்பாக ஆர்;ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் அமைச்சர்கள் இருவரும் அவர்களைச் சந்தித்தபோதே காணாமற்போனோரின் உறவினர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நல்லிணக்கம் பற்றி தற்போது பேசுகின்றார். அவரது ஆட்சிக் காலத்தில் காணாமற்போனோர் தொடர்பிலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் அவர் பதில் கூறலாம் தானே?. அவ்வாறு இல்லாமல் எவ்வாறு தற்போது, இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனக்கூறுகின்றார்.

பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணாமற்போனோரில் பலர் உயிருடன் இல்லை என்றார். அப்படியானால் அவர்களைக் கொன்றது யார்? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். பிடித்து nசென்றவர்கள் தொடர்பான ஆதாரங்கள் எங்களிடமுள்ளது என்றனர்.

'எங்கள் பிள்ளைகள் எங்கள் கண்முன்னே இறந்;திருந்தால், பிள்ளை இறந்துவிட்டது என்று கூறி மாலை போட்டு கிரியைகள் செய்து மனநிம்மதி அடைந்திருப்போம். ஆனால், எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் உள்ளது. அவர்களின் வருகைக்காக ஏங்கி காத்து இருக்கின்றோம்.

காணாமற்போனோரைத் தேடி நாங்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு வட மாகாண சபையால் உளவியல் சேவை செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் தான் பெரிது என்று பிரிந்து நிற்காமல், அனைத்து தமிழ் தலைமைகளும் ஒன்று சேர்ந்து காணாமற்போன பிள்ளைகளைத் தேடி கண்டறிந்து தாருங்கள்' எனவும் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X