2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வடக்கு மீனவர்களின் பிரச்சினையை சுஷ்மாவுக்கு சொல்வேன்

Thipaan   / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளையதினம் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம், இந்திய மீனவர்களால் வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மீனவர்களால், தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கையளிக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் காரணமாக, வட மாகாண மீனவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வொன்று பெற்றுக்கொள்ள வேண்டும். அதனால், இவ்விடயம் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடுவேன் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X