Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
நீண்டகாலமாக இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கும் தனியார் போக்குவரத்துத் துறைக்கும் இடையில் நிலவிவந்த பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்ற நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தற்போது முடிவு நிலையை எட்டியிருப்பதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனால் தெரிவித்தார்.
இந்த நேர அட்டவணையைத் தயார்செய்யும் பொருட்டு மாவட்ட ரீதியாகவும், மாகாண ரீதியாகவும் இதுவரை 35 கூட்டங்களுக்கு மேல் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ள நேர அட்டவணைக்கு இறுதிவரை இ.போ.சபையினர் தமது சம்மதத்தை தெரிவிக்காமல் இழுபறி நிலையில் இருந்துவந்ததாகவும், நேற்றைய தினம் அமைச்சர் நேரடியாக பிராந்திய பிரதம முகாமையாளர் (ஊசுஆ) மற்றும் நடைமுறைப்படுத்தும் முகாமையாளர் (ழுஆ) ஆகியோருடன் தொடர்புகொண்டு விடயம் தொடர்பில் கலந்துரையாடியபோது இறுதியில் தமது சம்மதத்தை தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஏற்கெனவே தனியார் போக்குவரத்துத் துறையினர் தமது சம்மதத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்தர்ப்பத்தில் இரண்டு தரப்பினரும் இவ்வாறு ஒற்றுமை நிலையில் ஒரு சுமுகமான நிலைக்கு வந்திருப்பதையிட்டு அமைச்சர் தனது நன்றிகளை இரண்டு தரப்பினருக்கும் தெரிவித்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
மேலும், இவ்விடயம் தொடர்பில் உருவாக்கப்பட்ட உயர்மட்டக் குழு எதிர்வரும் 19-04-2016 அன்று பிற்பகல் 3 மணியளவில் அமைச்சரின் தலைமையில் ஒன்றுகூடவுள்ளதாகவும், அன்றைய தினமே புதிய இணைந்த நேர அட்டவணை எத்தினத்தில் இருந்து அமுல்ப்படுத்துவது என்னும் தீர்மானத்தையும் எடுக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
21 minute ago
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
7 hours ago
9 hours ago