2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வடக்கு விவசாய அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் உதவிகள்

Gavitha   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (03) விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் 6 மில்லியன் ரூபாய் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கான வாழ்வாதார உதவிகள், சனசமூக நிலையங்கள், பாடசாலைகள், ஆலயங்கள் போன்ற பொது அமைப்புகளின் தேவைகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியும். அந்தவகையில், வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து சனசமூக நிலையங்கள், பாடசாலைகள், முன்பள்ளிகள் போன்றவற்றுக்கும் தனிப்பட்டவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கும் என 3 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான பொருட்கள் முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்ச்சியில் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன்,  விவசாய அமைச்சின் கணக்காளர் க.திருக்குமார் ஆகியோருடன் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகளும் தனிப்பட்ட உதவிபெறும் பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X