2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வடக்கிலும் பெரும்பாலான சேவைகள் ஸ்தம்பிதம்

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன், எஸ்.நிதர்ஷன்

கிழக்கு மாகாணத்தில் அனுஸ்டிக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வடக்கிலும் பெரும்பாலான சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தன.

ஐ.நா இலங்கைக்கு கால அவகாசம் வழங்ககூடாது எனவும் சர்வதேச நீதி விசாரணையைக் கோரியும் கிழக்கு மாகாணத்தில் இன்று (19) இடம்பெற்ற ஹர்த்தாலுக்கு வடக்கு மாகாணத்திலும் ஆதரவு கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், வடக்கில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அநேகமான சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

சில இடங்களில் காலைவேளை வழமைபோன்று வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்ற போதும் நண்பகலுடன் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X