Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பரிசோதனையின்போது வடக்கில் இரண்டு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் எட்டுப் பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டுப் பேரில் நான்கு பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று 24 பேருக்கான COVID-19 தொற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனைகள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டன. 14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர். ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர். எட்டுப் பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியைச் சேர்ந்த தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள்.
அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக இம்மாதம் முதலாம், மூன்றாம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஆறு பேருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
7 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
46 minute ago