2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வடக்கில் நடமாடும் விற்பனை சேவை

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தைப்பொங்கலை முன்னிட்டு, வடமாகாண உள்ளூர் உற்பத்திகளை நடமாடும் சேவைகள் ஊடாக மக்களுக்கு விற்பனை செய்ய  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவியுடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான நடமாடும் விற்பனை சேவையினை நடத்துவதாகவும் இந்த சேவையானது எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்கள், சந்தைகள் போன்ற இடங்களில் இந்த நடமாடும் வ்ரிபனை  விற்பனை சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்காலத்தில் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்ரிக், பொலித்தீன் போன்ற உக்க முடியாத மூல பொருட்களில் செய்த பொருட்கள் சந்தைக்கு விற்பனைக்கு வருத அதனால் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், அவற்றை இயன்ற அளவு மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமமெனவும் வலியுறுத்தினார்.

அதேநேரம் உள்ளூர் உற்பத்திகள் பெருமளவு சந்தைக்கு வருகின்றனவெனவும் அவற்றுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து,  அவற்றை கொள்வனவு செய்வதன் ஊடாகவே உள்ளூர் உற்பத்தியாளர்களை வளர்க்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X