2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வடக்கில் முழு கதவடைப்புப் போராட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 23 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன் 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு தழுவிய ரீதியில்  மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ள நிலையில்,  அன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் முழு கதவடைப்பு  போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசியல் கட்சிகள், பல்கலைகழ சமூகம், பொது  அமைப்புகள் உட்பட்ட பலதரப்பட்டவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தப் போராட்டம், பின்னர் ஊர்வலமாக  அங்கிருந்து கிளிநொச்சி ஏ9 வீதி வழியாக டிப்போச் சந்திவரை சென்றடைந்து அங்கு ஐ.நாவுக்கான மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X