2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள்

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 27 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு விடயத்துக்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்கின்றார்கள். இதுவரைக்கும் எனக்கு எதிராக யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களின் 217 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

அவற்றை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் 2 வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ளார். அந்நிலையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வாறாக நாம் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .