Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 24 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா, எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடப் பூர்த்தியையொட்டி, 3 இலட்சம் கையெழுத்துகளைச் சேகரித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பும் செயற்றிட்டம், இன்று (24) ஆரம்பிக்கப்பட்டது.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக, இன்றுக் காலை 9 மணியளவில், இந்தக் கையொப்பம் பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமது கெயொப்பங்களை இட்டனர்.
இந்தக் கையெழுத்துகளுடன் கூடிய தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும், ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago