2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

’வடக்கு தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்’

Editorial   / 2017 செப்டெம்பர் 10 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“வடக்கிலுள்ள தமிழர்கள், பயங்கரவாதிகள் அல்லர்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

வடக்கு பகுதியிலுள்ள தமிழ்கள் தொடர்பில், தெற்கு பகுதியிலுள்ள மக்கள், தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், கண்டிக்கு, நேற்று (09) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஸ்ரீ தலதா மாளிகைளில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், மல்வத்தை மாகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள சித்தார்த்தரை சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்டார். இதையடுத்து, ஊடகவியலாளருக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, வடமாகாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு, அங்குள்ள மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினையை, நேரில் காணுமாறு, மல்வத்தை மாகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள சித்தார்த்தருக்கு, முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

கூட்டாட்​சி அமைப்பதற்கான அழைப்பு, நாட்டை பிரிப்பதற்கான ஒரு நகர்வு அல்ல என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், நாட்டை பிரிப்பதற்கான எந்தவொரு நோக்கமும் தங்களுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

வடக்கு பகுதியில் என்ன நடக்கின்றது என்பதை, தெற்கு பகுதி மக்களுக்கு, சில ஊடகங்கள், தவறான தகவல்களை வழங்கி வருவதாகவும் வட பகுதியில் புத்தர் சிலைகளை வைப்பதற்கு, வடக்கு மக்களுக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால், அவை சட்டரீதியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதையே, மக்கள் விரும்புவதாகவும் இதன்போது முதலமைச்சர் கூறினார்.

மக்களுக்கு இடையே மோதல் ஏற்படும் ​வகையில், இந்து கோவிலொன்று அருகிலேயே, புத்தர் சிலைகளை, சட்டவிரோதமாக வைப்பதாலேயே, பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X