2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வடமாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு

George   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனின் இறுதிக்கிரியைகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் பொருட்டு, வடமாகாண சபையின் அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (06) ஆரம்பமானது. இதன்போது, அன்டனி ஜெகநாதனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்களில் சபை அமர்வு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X