2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வடமாகாண சபையில் கட்டுத்துவக்கு வேண்டாம்

Niroshini   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன், எம்.றொசாந்த்

வடமாகாண சபை அமர்வுக்கு கட்டுத்துவக்குடன் நீங்கள் வருகை தரமாட்டீர்கள் என்றால் கட்டுத்துவக்கு வைத்திருப்பதற்கான அனுமதியை பெறுவதற்கு உதவி செய்வதாக ஆளுங்கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன், எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதனைப் பார்த்துக் கூறினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போது, கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்துத் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

தென்மராட்சிப் பிரதேசத்தில் நுழையும் குரங்குகள், மற்றைய இடங்களில் இடையூறாகவிருக்கும் காட்டுவிலங்குகளைக் கட்டுப்படுத்த கட்டுத்துவக்கு பாவிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் கூறினார்.

கட்டுவத்துவக்கு பெற்றுக்கொடுத்தால் அதனைக் வடமாகாண சபைக்கு கொண்டு வரமாட்டீர்கள் என்று உறுதிமொழி வழங்கினால், அனுமதி பெறுவதற்கான எனது ஆதரவை தரலாம் என சயந்தன் பதிலளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X