2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரனையுடன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்தும் பண்பாட்டுப் பெருவிழா, நாளை சனிக்கிழமை (03), மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 மருதங்கேணி பிரதேச செயலாளர் கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் , சிறப்பு விருந்தினராக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் மற்றும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் கலாசார நிகழ்வுகள், கலைச்சாகரம் கையேடு வெளியீடு, கலைச்சாகரம் விருது வழங்கும் நிகழ்வு என்பன நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X