Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 01 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி வடமராட்சி கிழக்குக்கான சைவ மகா சபை சனிக்கிழமை (30) அமைக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விலேயே இச்சபை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் ப.நந்தகுமார், பொருளாளர் அ.சிவானந்தன், இணைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் அடிப்படை வசதிகளற்று இருக்கும் வடமராட்சி கிழக்கை மீள கட்டியெழுப்புவதற்கு தேவையான பொருளாதார கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கும் அப் பிரதேசத்துக்கான அறநெறிப் பாடசாலைகளை ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் உருவாக்குவதற்கும் இன்றைய சூழலில் அதிகரித்து காணப்படும் மத மாற்றத்தை தடுப்பதற்கான தேவை கருதியும் வடமராட்சி கிழக்குக்கான சைவ மகா சபை அமைக்கப்பட்டது.
இதன் தலைவராக சி.வ.கணேஸ், பொதுச் செயலாளராக சி.கலீபன், பொருளாளர் பொ.பூபாலசிங்கம் உட்பட 18 பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், சைவ மகா சபையின் சிவதொண்டர் சிவமங்கையர் அமைப்புக்களையும் இணைத்து அவர்களின் ஊடாக மது, புகை, போதை தவிர்ப்பு பிரசாரங்களை முன்னெடுத்தலும் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டை ஏற்படுத்தலும் ஆன்மீக, கலாசார, அறநெறிப் பண்புகளை இளைஞர்களிடையே ஏற்படுத்தலையும் நோக்காக கொண்டு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago