2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வடமராட்சி கிழக்கில் அதிகமாக பிடிபடும் சிவப்பு இறால்

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

வடமராட்சி கிழக்கு கடலில் இறால் பருவம் தற்போது ஆரம்பித்துள்ளமையால் அதிகளவு இறால்களை மீனவர்கள் பிடிப்பதாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இந்த இறால் பருவத்தில்; அதிகளவில் பெரிய சிவப்பு இறால்கள் பிடிக்கப்பட்டு, அவை கிலோ 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த இறால்களை வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சமாசம் மற்றும் தனியார் வர்த்தகர்கள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

வடமராட்சி கிழக்கின் ஆளியவளை பகுதியில் 15ஆம் திகதி தொடக்கம் இறால் பிடி மேற்கொள்ளப்படுகின்றது. வெற்றிலைக்கேணி, செம்பியன்பற்று, தாளையடி ஆகிய பகுதிகளில் எதிர்வரும் தினங்களில் இறால் பிடியானது ஆரம்பிக்கப்படும். அதன் பின்னர் இறாலின் விலையானது குறைவடையும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

இந்த இறால் பருவமானது எதிர்வரும் 2 மாதங்களுக்கு நீடிக்கும் அதேவேளை, அந்தக் காலத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை மீனவர்கள் மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றது.

சுண்டிக்குளம் பகுதியில் நன்னீர் கடலில் இணையும் பகுதியில் அதிகளவு இறால் உற்பத்தி இடம்பெற்று, அவை வடமராட்சி கிழக்கு கடலை நோக்கி இடம்பெயர்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X