2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வடமராட்சியில் ஆயுதங்களை தேடி அகழ்வு

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்து அகழ்வுகள் நடத்தப்படுகின்றது.

அடையாளம் காணப்பட்ட பகுதி தற்போது பளை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தற்போது அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை கொண்டுள்ள குறித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு உள்ளதாக பளை பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.

குறித்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலிலேயே அவ்வாயுத கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அங்கு வந்துள்ள பளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X