Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 07 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாணத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்து வருவதாக வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017ஆம் ஆண்டில் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 7ஆயிரத்து 892 குழந்தைகள் பிறந்துள்ளன. 2017ஆம் ஆண்டு 8 ஆயிரத்து 152 குழந்தைகள் பிறந்துள்ளன. அதேபோல் வவுனியா மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 572 குழந்தைகளும், 2017ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 796 குழந்தைகளும் பிறந்துள்ளன.
அதேவேளை மன்னார் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 833 குழந்தைகளும், 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 839 குழந்தைகளும் பிறந்துள்ளன. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 498 குழந்தைகளும், 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 516 குழந்தைகளும் பிறந்துள்ளன. அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 576 குழந்தைகளும், 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 880 குழந்தைகளும் பிறந்துள்ளன.
இவ்வாறாக வடமாகாணத்தில் 2016 ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 371 குழந்தைகளும், 2017ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 182 குழந்தைகளும் பிறந்துள்ளன. அதன் பிரகாரம் 2016ஆம் ஆண்டை விட 2017ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 811 குழந்தைகள் அதிகமாக பிறந்துள்ளன என வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025