2025 ஜூலை 05, சனிக்கிழமை

வட்டு. இளைஞன் கடத்தி கொலை: கடற்படையின் செயற்பாடு குறித்து விசாரணை

Editorial   / 2024 மார்ச் 17 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

வட்டுக்கோட்டை இளைஞன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது , கடற்படையினர் நடந்து கொண்ட விதம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் , யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். 

வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞன் , தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாம் முன்பாக வன்முறை கும்பல் ஒன்றினால் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 

தம்பதியினரை வன்முறை கும்பல் கடத்த முற்பட்ட வேளை , அவர்கள் கடற்படை முகாமினுள் தஞ்சம் கோரி ஓடிய வேளை , கடற்படையினர் அவர்களை தாக்கி திருப்பி விரட்டியுள்ளனர். வன்முறை கும்பல் , கடற்படை முகாமிற்கு அருகில் வைத்தே தம்பதியை வாகனத்தில் கடத்தி சென்றது. 

குறித்த சம்பவம் கடற்படை முகாமிற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகி இருந்த நிலையில் , அது தொடர்பிலான காணொளிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

அந்நிலையில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் பிரகாரம் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தனது சொந்த பிரேரணையாக எடுத்துக்கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .