2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வதை செய்யும் வகையில் மாடுகளை ஏற்றி சென்றவருக்கு பிணை

எம். றொசாந்த்   / 2019 ஜூன் 13 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரவூர்தியில் மாடுகளை வதை செய்யும் முகமாக 23 மாடுகளை ஏற்றி சென்றவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மன்னார் வீதியில் பாரவூர்தி (லொறி) ஒன்றில், மாடுகளை ஏற்றி செல்வதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பிரகாரம் அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் வைத்து குறித்த பாரவூர்தியை மடக்கி பிடித்தனர்.

அதனுள்,  மாடுகளை வதை செய்யும் விதமாக 23 மாடுகள் ஏற்றப்பட்டு இருந்தன. அதனை அடுத்து மிருக வதை தடை சட்டத்தின் கீழ் சாரதியை கைது செய்த பொலிஸார் நேற்று (12) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.

அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சாரதியை 50 ஆயிரம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான், வாகனத்தையும் மாடுகளையும் விடுவிக்க உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .