2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வயோதிபர்களை அரசியலில் இருந்து விலக்குவதும் நல்லிணக்கமே

George   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'நாட்டில் உள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாக, இடம்பெறும் தேர்தல்களில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரங்களில் மக்கள் பிரதிநிதிகளாக வயோதிபர்கள் இடம்பெறுவதை புறம்தள்ளி, இளம் சமூகத்தினர் அரசியல் பிரதிநிதிகளாக வருவதற்கான செயன்முறையினை அரசு மேற்கொள்வதன் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியும்' என கடந்த கால போரினால் பாதிக்கபட்ட பெண் ஒருவர் நல்லிணக்க செயலணியிடம் தெரிவித்தார்.

நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வு, சனிக்கிழமை (06) யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த பெண் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'நாட்டில் தற்போது உள்ள பாரிய பிரச்சினை வேலையில்லாப பிரச்சினை. இதனால் இளம்சமூகத்தினர் வெகுவாக பாதிக்கபட்டுள்ளனர். எமது மக்கள் பிரதிநிதிகளும் பேசுவோம், பேசுவோம் என்று இவ்வளவு காலமும் பேசிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, ஒரு செயற்பாடும் இல்லை. ஆகவே, அவ்விடத்திற்கு மக்கள் பிரதிநிதியாவதற்கு இளம் சமூகத்திற்கு இடமளிக்க வேண்டும்.

அவ்வாறு ஒரு இளைஞன் பிரதிநிதியாக வந்தால் அவன் தன்போன்ற இளம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் கதைத்து அதற்கான தீர்வை கொண்டுவருவான். இதற்கான ஒரு செயற்பாட்டை அரசு முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு முன்னெடுப்பதன் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X