2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வயல் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2016 ஜூலை 04 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை, இலந்தைக் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள வயல் கிணற்றிலிருந்து, ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கிணற்றில், ஞாயிற்றுக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 2 கைக்குண்டுகள் மற்றும் 80 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டுகள் 07 என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக பயன்பாடற்றிருந்த இந்த வயல் கிணற்றை, நேற்று துப்பரவு செய்யும் போது, ஆயுதங்கள் இனங்காணப்பட்ட நிலையில், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசென்ற பொலிஸார், விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் ஆயுதங்களை மீட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X