2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வயோதிபருக்கு கத்திக்குத்து

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணுவில் கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கு வசித்துவரும் முதியவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதான சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (26) இடம்பெற்ற இச்சம்பவத்தில் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்திக்குத்துக் காயங்களுக்குள்ளான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கே.குமாரசாமி (வயது 82) என்ற முதியவரே கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

விசாரணைகளின் அடிப்படையில் இளைஞர்கள் இருவர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் முதியவரின் வீட்டில் வேலை செய்பவர்கள். அவர்களில் ஒருவரே மதுபோதையில் முதியவரைக் குத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது” பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .