2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வர்த்தக நிலையத்தில் திருட்டு

Princiya Dixci   / 2016 நவம்பர் 21 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை, தம்பசிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் ஜன்னல் கம்பியினை வளைத்து உள்ளே சென்ற திருடர்கள் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம், இன்று திங்கட்கிழமை (21) அதிகாலை  இடம்பெற்றுள்ளதாகப் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இத் திருட்டு சம்பவத்தில் 15 ஆயிரம் ரூபாய் பணம், 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் என்பன திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X