2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வர்த்தகர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 மார்ச் 31 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டதிட்டங்களை மீறி பொருள் விற்பனையில் ஈடுபட்ட சாவகச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (30) தீர்ப்பளித்தார்.

யாழ். மாவட்டச் செயலக பாவனையாளர் அலுவல்கள், அதிகார சபை அதிகாரிகள் கடந்த வாரம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் காலாவதியான யோகட்டை விற்பனை செய்த ஒரு வர்த்தகரும் காலாவதியான மென்பானத்தை விற்பனை செய்த இன்னுமொரு வர்த்தகரும் பிடிக்கப்பட்டனர்.

இருவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வர்த்தகர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, இருவருக்கும் தலா 9 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X