Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Niroshini / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
பொதுமக்களின் சில பொறுப்பற்ற செயற்பாடுகளால், தமது பிரதேசத்தில், டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரிக்கலாமென, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.
அத்துடன், தற்பொழுது பெய்யும் பருவ மழையால், எதிர்வரும் வாரங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்படலாமெனவும், இவர் எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தற்போதைய டெங்கு காய்ச்சல் நிலைமை தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துரைத்த பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஷ
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில், இம்மாதம் டெங்கு நோயாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லையென்றார்.
மழை பெய்தப் பின்னர் வீதியோரங்களில் திண்மக் கழிவுகளை வீசி விட்டுச் செல்லும் சம்பவங்கள் தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளன எனக் குற்றஞ்சாட்டிய அவர், இது மிகவும் பாரதூரமான விடயமாகுமெனவும் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவுகின்ற இக்காலத்தில், தாங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தான் வைத்திய சேவைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோமெனக் கூறிய அவர், இந்நிலையில,; குறித்தளவு வளத்துடன் தொடர்ச்சியாக வைத்திய சேவையை மேற்கொள்வதற்கு, டெங்கு நோயாளர்கள் அதிகளவில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படாமல் இருப்பதற்கு, பொதுமக்கள் மத்தியில், முன்கூட்டியே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு டெங்கு நோய் தொடர்பான அறிகுறிகள் இருந்தால், உடனடியாக வைத்தியசாலையில் குருதிப் பரிசோதனை செய்வதன் மூலம் அதற்குரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியுமெனவும், சி.யமுனாநந்தா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago
7 hours ago
02 May 2025