2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வலிகாமம் வடக்கை தவறவிட்ட கூகுள்

Niroshini   / 2016 மார்ச் 23 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கூகுள் வீதிப் படங்கள் இன்று புதன்கிழமை (23) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலய பகுதிகளை பார்வையிட முடியாதுள்ளது.

கூகுள் வீதிப் படங்கள் எடுப்பதற்கான கடந்த காலங்களில் யாழ்ப்பாண வீதிகளில் கூகுள் நிறுவன கார் ஒன்று வீதிகள் அனைத்திலும் சென்றது. ஆனால், அந்தக் கார் வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லவில்லையென்பது இன்று வெளியிடப்பட்ட கூகுள் வீதிப் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தைத் தாண்டி வீதிப் படங்கள் கூகுளில் இல்லை. அதேபோல், எங்கெல்லாம் உயர்பாதுகாப்பு வலய எல்லைகள் தொடங்குகின்றதோ அங்கிருந்து உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குட்பட்ட இடங்களுக்கான படங்கள் இல்லை.

கூகுள் வீதிப் படங்கள் மூலம் தங்கள் இடங்களையும் வீடுகளையும் பார்க்க காத்திருந்த வலிகாமம் வடக்கு மக்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X