Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜனவரி 27 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை மீறி வந்து வலை தேடிய குற்றச்சாட்டில் காங்கேசன்துறை கடற்படையினரால் கடந்த 18ஆம் திகதி கைதான இந்திய மீனவர்கள் மூவரையும் தொடர்ந்தும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் இன்று புதன்கிழமை (27) உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூர், தல்காவினை சேர்ந்த கருப்பையா ராமகிருஸ்ணன் (வயது 62), வேதநாயகம் சிவன் (வயது 28) மற்றும் அந்தோனி சேவியர் (வயது 28) ஆகிய மூவரும் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, இலங்கை மீனவர்களால் இவர்களின் மீன்பிடி வலை அறுக்கப்பட்டது.
இவ்வாறு அறுத்துவிடப்பட்ட வலையின் ஒரு பகுதியினை தேடி மாதகல் கடற்பரப்பினுள் நுழைந்த போது இவர்களை கடற்படையினர் கைது செய்து இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
மீண்டும் இன்று (27) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து உரிய அறிவுறுத்தல் கிடைக்கபெறவில்லை என பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். இதனையடுத்து நீதவான் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
15 minute ago
20 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
34 minute ago
37 minute ago