Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2019 மார்ச் 21 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலி.வடக்கில் கடற்படை முகாமுக்காக 252 ஏக்கர் காணியை சுவீகரிப்பதுக்கான அளவீடுகள் நாளை 22ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அந்தப் பணி கைவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாநாயக்க ஆகியோரால் இன்று (21) காலை தனக்கு அறிவிக்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா தெரிவித்தார்.
252 ஏக்கரில் பெரியளவிலான கடற்படை முகாமை அமைப்பதற்காக ஜே-226 பகுதி நகுலேஸ்வரம் தொடர்புபட்ட நிலங்களையும் சுவீகரிக்க நாளை 22ஆம் திகதி அளவீடு செய்யப்படும் என நில அளவைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.
தமக்கு பிரதமரால் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி இந்த காணி சுவீகரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த காணி அளவீட்டுப் பணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பிரதமர் அலுவலகத்தால் இன்று காலை தமக்கு அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
44 minute ago
17 May 2025