2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு மனு கையளிப்பு

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் காணப்படுகின்ற வளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு பெற்றோர்கள், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கடந்த வாரம் மனுக்கையளித்துள்ளனர்.

423 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையில் அதிபருடன் 24 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில்,இப்பாடசாலையில் 22 வகுப்பறைகளுக்குப் பதிலாக 16 வகுப்பறைகளே காணப்படுகின்றன. நூலகம், ஆய்வுகூடம், கணினி அறை என்பன இல்லை. 01 தொடக்கம் 11 ஆம் வகுப்பு வரையிலேயே வகுப்புகள் நடைபெறுகின்றன.

மீள்குடியேற்றத்தின் தொடக்கத்தில் இராணுவத்தினர் இப்பாடசாலையில் நிலைகொண்டிருந்தனர்.

இந்நிலையில், பூநகரிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பூநகரிக் கல்விக் கோட்டப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பாடசாலையை இயக்குவதற்கு இராணுவம் வெளியேற வேண்டுமென்றதையடுத்து, 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி இராணுவம் வெளியேறி பாடசாலை இயங்கத் தொடங்கியது.

ஆனால், இப்பாடசாலையில் வளப்பற்றாக்குறை தொடர்வதன் காரணமாக, பெற்றோர் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் மனு கையளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X