2025 மே 15, வியாழக்கிழமை

வளவாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்

Editorial   / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வீடமைப்பு நிர்மாணத்துறை, கலாசார அலுவல்கள் அமைச்சால் நடத்தப்படும் வடமராட்சி வடக்கு கலாசார மத்திய நிலையத்துக்கு, வளவாளர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டுக்கான இசை, சித்திரம், நடனம், கிராமியக் கலைகள், யோகாசனம், ஆங்கிலம், சிங்களம் ஆகிய கற்கை நெறிகள் இடம்பெறவுள்ளது.

இக்கற்கை நெறிகளுக்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கே, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணபதாரிகள் வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர், தமது விண்ணப்பப் படிவங்களை, டிசெம்பர் 12ஆம் திகதிக்கு முன்னர், நிலையப் பொறுப்பதிகாரி, கலாசார மத்திய நிலையம், புற்றளை, புலோலி எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .