2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வழித்தட அனுமதியில்லாத பஸ்ஸூக்கு அபராதம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வழித்தட அனுமதியின்றி, யாழ்ப்பாணம் - கொழும்பு பஸ் சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ் ஒன்றின் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் செவ்வாய்க்கிழமை (06) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றுக்கொண்டிருந்த மேற்படி பஸ்ஸை, நுணாவில் பகுதியில் வைத்து, சாவகச்சேரி பொலிஸார் சோதனை செய்தனர். இதன்போது, பஸ்ஸூக்கு வழித்தட அனுமதி இல்லை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் வேறு பஸ்களில் மாற்றி ஏற்றி அனுப்பி வைத்த சாவகச்சேரி பொலிஸார், பஸ்லை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்று பஸ் உரிமையாளருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X