2026 மே 06, புதன்கிழமை

’’வழுக்கும் தரை... தடுமாறும் பாம்பு!’’

Mayu   / 2026 மே 06 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றில் மாபிள் (Marble) தரையில் ஊர்ந்து செல்ல முடியாமல் பாம்பு ஒன்று தத்தளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தின் ஒரு குடியிருப்பிற்குள் புகுந்த பாம்பு, அங்கிருந்த வழவழப்பான மாபிள் தரையின் மீது ஊர்ந்து செல்ல முயற்சித்துள்ளது. பொதுவாக கரடுமுரடான தரையில் பிடிமானத்தைப் பெற்று நகரும் பாம்புகளால், அதிக வழவழப்புத் தன்மை கொண்ட மாபிள் தரையில் பிடிமானத்தைப் பெற முடியவில்லை. இதனால் அந்தப் பாம்பு ஒரே இடத்திலேயே நீண்ட நேரமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தது.

வீட்டு உரிமையாளர்களால் படம் பிடிக்கப்பட்ட இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. பாம்பைக் கண்டு அச்சமடையாமல், அது மாபிள் தரையில் படும் அவதியைக் கண்டு பலரும் வியப்புத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நேரங்களில் பாம்புகள் பயத்தில் ஆக்ரோஷமாகத் தாக்கக் கூடும் என்பதால், பொதுமக்கள் சுயமாக அவற்றைப் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .