2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வவுனியா நீர்ப்பாசன பொறியிலாளரின் இடமாற்றத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதேச பொறியிலாளரை இடமாற்றம் செய்தமையைக் கண்டித்து, வவனியா மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகளது ஏற்பாட்டில், இன்று செவ்வாய்க்கிழமை (28) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வவுனியா மாவட்டத்துக்கான பிரதேச நீர்ப்பாசன பொறியிலாளர் எஸ்.சத்தியரூபன், வவுனியாவில் கடமைகளை பொறுப்பேற்று செயற்பட்டு வந்த நிலையில், 5 மாதங்களிலேயே இந்த இடமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த இடமாற்றத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தங்களது பிரதேசங்களில் விவசாய அபிவிருத்திகளுக்கு பங்கம் ஏற்படும் வகையிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது அபிவிருத்திக்கு பாதகமாக அமையும் எனவும் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்டச் செயலக முன்றலில் ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்டம், அரச அதிபரின் வாயில் வரை சென்று, அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதை அடுத்து நிறைவு பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X