Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 14 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.அகரன்
“யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக” வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா வளாகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியிலிருந்து, இலங்கையில் உள்ள கல்வி சாரா ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தால் எமது வளாகத்தின் கல்வி சார், கல்வி சார செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று (13) இடம்பெற்ற பீடாதிபதிகள், துறைசார் தலைவர்களுடனான கலந்துரையாடலின்படி, கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் முடிவடைந்த பின்னர் எங்களது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் அனைத்தும் முன்பே முடிவடைந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை (12) முதல், வியாபார கற்கைகள் பீடத்தின் புதிய ஆண்டுக்கான கற்கை நெறிகள் மட்டுமே ஆரம்பமாகியிருந்தன. அப்போது கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக கல்விக்கான அனைத்து வசதி, வாய்ப்புக்களையும் வழங்க முடியாத காரணத்தால் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இடைநிறுத்தியிருந்தோம்.
மேலும் கடந்த 03ஆம் திகதி நடைபெறவிருந்த பிரயோக விஞ்ஞான பீடத்தின் தகவல் தொழில்நுட்ப கற்கை நெறிக்கு அனுமதிப்பதுக்கான விவேக நுண்ணறிவு பரீட்சையானது பிற்போடப்பட்டுள்ளது. அத்துடன் இப்பரீட்சைகளுக்கான திகதியும் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த பிரயோக விஞ்ஞான கற்கைநெறிக்கான திகதியும் இப்போராட்டம் முடிவடைந்த பின்னர் பத்திரிகை வாயிலாக அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
30 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago