எம். றொசாந்த் / 2018 மார்ச் 26 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}



யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தினுள் பல உறுப்பினர்கள் கைத்தொலைபேசியில் உரையாடிய வண்ணம் காணப்பட்டனர்.
யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவுக்காக இன்று (26) கூடியது.
அதன்போது யாழ்.மாநகர சபை மேயர் தெரிவுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. தமிழரசு கட்சி சார்பில் இமானுவேல் ஆனோல்ட், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணன், ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முடியப்பு ரெமீடியஸ் ஆகியோர் பிரேரிக்கப்பட்டனர்.
அதை அடுத்து வாக்கெடுப்பு மூலம் மேயர் தெரிவு செய்யப்படுவார் என ஆணையாளர் தெரிவித்தார்.
அதனை அடுத்து வாக்கெடுப்புகள் நடாத்தபட்டன. அதன் போது பல உறுப்பினர்கள் கைத்தொலைபேசியில் உரையாடிய வண்ணம் காணப்பட்டனர்.
வாக்கெடுப்பின் போது தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி ஊடாக தமது கட்சி தலைமைகளிடம் ஆலோசனை கேட்டார்களா? என அங்கிருந்த பலரும் சந்தேகம் வெளியிட்டனர்.
18 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
37 minute ago